ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சமூக வலைதளங்களிலிருந்து விலகிய மமிதா பைஜூ!

சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக மமிதா பைஜூ விலகல்...

mamitha baiju

மமிதா பைஜூ

Published On :9 ஜூலை 2026, 3:05 pm IST

நடிகை மமிதா பைஜூ சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளியான இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

தமிழிலும் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். முதல்வர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

மேலும், நடிகர் சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் மற்றும் நடிகர் நிவின் பாலியுடன் பத்தேலம் குடும்ப யூனிட் உள்பட 5 திரைப்படங்களின் வெளியீட்டுக்கு மமிதா காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக மமிதா தெரிவித்துள்ளார். மேலும், புரமோஷன் சார்ந்த விஷயங்களை மட்டும் அவரது நிர்வாகக் குழு பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

Actress Mamitha Baiju has temporarily stepped away from social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.