ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தாவணி போட்ட தீபாவளி... ஓணம் கொண்டாட்டத்தில் கவனம் பெற்ற மமிதா பைஜூ!

நடிகை மமிதா பைஜூ ஓணம் கொண்டாட்டத்தில் செய்த க்யூட்டான வைரலாகும் விடியோக்கள் குறித்து...

Mamitha Baiju grabs attention during Onam celebrations!

ஓணம் கொண்டாட்டத்தில் கவனம் பெற்ற மமிதா பைஜூ! - படங்கள்: யூடியூப் / பாவனா ஸ்டூடியோஸ்

Published On :20 ஆகஸ்ட் 2026, 2:21 pm IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேம் குடும்ப யூனிட் படக்குழு நடத்திய கொண்டாட்டத்தில் நடிகை மமிதா பைஜூவின் க்யூட்டான ரியாக்‌ஷன்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

மலையாளம் மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் முன்னணி நடிகையாக நடிகையாக மாறிவரும் மமிதா பைஜூ நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை பிரேமலு படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கிரீஷ் ஏடி இயக்கியுள்ளார்.

ஃபகத் ஃபாசில், திலீஷ் போத்தன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நாளை (ஆக.21) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படக்குழு ஓணம் கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தில் கயிறு இழுக்கும் போட்டிகள் உள்பட பல பாரம்பரியாமன கேரள போட்டிகளும் நடத்தப்பட்டன.

இந்தக் கொண்டாட்ட விடியோவில் நடிகை மமிதா பைஜூ செய்த குறும்புத்தனங்களும் க்யூட்டான ரியாக்‌ஷன்களும் ரசிகர்களை வெகுவாக கவரந்துள்ளன. இந்த விடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ நடித்த விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் திரைப்படம் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Bethlehem kudumba unit Mamitha Baiju grabs attention during Onam celebrations!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.