
மறுவெளியீடாகும் மாதவன் - மீரா ஜாஸ்மினின் ரன் திரைப்படம்!
நடிகர் மாதவன், நடிகை மீரா ஜாஸ்மின் நடித்த ரன் திரைப்படத்தின் மறுவெளியீடு குறித்து...

ரன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / லிங்குசாமி
நடிகர் மாதவன், நடிகை மீரா ஜாஸ்மின் நடித்த ரன் திரைப்படம் மீண்டும் மறுவெளியீடாகவிருக்கிறது. இந்தப் படத்தை ஜகதம்பே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், அனு ஹாசன், ரகுவரன், அடுல் குல்கர்னி, விவேக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இதே தலைப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படம் நாளை (ஜூலை 10) திரையரங்குகளில் மறுவெளியீடாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மறுவெளியீட்டு டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் மாதவன் நடிப்பில் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. அதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
A Rehash of the "Nostalgic Memory" that's gonna hit you
— Jagathambe Films (@jagathambe_prod) July 8, 2026
2 days to gohttps://t.co/bRQVaaalWQ #Run re-releasing on Jul 10th@jagathambe_prod@bisonbalaji@MegaSuryaProd @dirlingusamy @ActorMadhavan@Actor_vivek #meeraJasmin#Jeeva #VidyaSagar@peterHeinoffl @SakthiFilmFctry
Summary
Madhavan and Meera Jasmine's film 'Run' is being re-released!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







