ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விமர்சனங்களால் பாதிப்பில்லை? ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா!

நடிகை ஆலியா பட் நடித்துள்ள ஆல்பா திரைப்படம் குறித்து...

Alpha Film poster.

ஆல்பா படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / யஷ் ராஜ் ஃபிலிம்ஸ்.

Published On :8 ஜூலை 2026, 8:12 pm IST

நடிகை ஆலியா பட் நடித்துள்ள ஆல்பா திரைப்படம் ஐந்து நாள்களில் உலகம் முழுவதும் ரூ. 71.66 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் - ஷர்வாரி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான புதிய படம் “ஆல்ஃபா”. ஸ்பை ஆக்‌ஷன் கதைகளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ஷிவ் ரவைல் இயக்கியுள்ளார்.

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஷர்வாரி, அனில் கபூர், பாபி டியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ’ஆல்பா’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ. 17.42 கோடி வசூலித்தது. இந்த நிலையில், ஐந்து நாள்களில் உலகம் முழுவதும் ரூ.71.66 கோடி வசூலித்துள்ளது.

ஹிந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. விமர்சனங்களால் இந்தப் படத்தின் வசூல் பாதிக்கப்படவில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

Summary

Unaffected by criticism... Alia Bhatt's 'Alpha' crosses ₹70 crore in world wide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.