ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாதவனின் ஜிடிஎன் பட முதல் பாடல்!

நடிகர் மாதவனின் “ஜிடிஎன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது...

GDN First single

மாதவனின் ஜிடிஎன் பட முதல் பாடல்..

Published On :8 ஜூலை 2026, 9:24 pm IST

நடிகர் மாதவன் நடித்துள்ள “ஜிடிஎன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் நடித்து வெளியான “ராக்கெட்ரி” படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவின் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள “ஜிடிஎன்” படத்தின் ”தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்” எனும் முதல் பாடல் இன்று (ஜூலை 8) மாலை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

The first song from the movie "GDN," starring actor Madhavan, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.