
தனுஷ் வெளியிட்ட பதிவினால் குழப்பம்..! எந்தப் படத்தின் அப்டேட் இது?
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் குறித்து...

தனுஷ் - சாய் அபயங்கர். - படங்கள்: எக்ஸ் / சாய் அபயங்கர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட் ஜூலை 10ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது அவரது 55-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இந்தப் படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஓம் எனவும் சமீபத்தில் பெயரிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தனுஷின் 56ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. சாய் அபயங்கர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் என அவரது இன்ஸ்டா பக்கத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது ஓம் திரைப்படத்தின் அப்டேட்டா அல்லது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட்டா என்பது குழப்பத்தில் இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அறிவியல் புனைவாக உருவாகும் இந்தப் படம் குறித்த மற்ற தகவல்கள் ஜூலை 10ஆம் நாள் அதிகாரபூர்வமாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கர திரைப்படம் மிகவும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. தனுஷ் 55 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ð¨âð³ð§¨ https://t.co/N5BbHUlm96
— abhyankkar (@SaiAbhyankkar) July 7, 2026
Summary
Confusion caused by Dhanush's post..! Which movie is this update for?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







