டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

இயக்குநர் பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்த ஏன் வரவில்லை? கண்கலங்கிய ஊர்வசி!

நடிகை ஊர்வசி மறைந்த இயக்குநர் பாக்யராஜ் குறித்து பேசியுள்ளார்...

News image

இயக்குநர் கே. பாக்யராஜ், ஊர்வசி. - கோப்புப் படங்கள்.

Updated On :5 ஜூலை 2026, 3:48 pm IST

மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராதது குறித்து நடிகை ஊர்வசி பேசியுள்ளார்.

இயக்குநர், நடிகர் என இந்தியளவில் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக ஜூன் 27 அன்று திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தையும் வேதனையையும் அளித்தது.

தொடர்ந்து, திரைத்துறையில் இருக்கும் பல பிரபலங்களும் பாக்யராஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஆனால், முந்தானை முடிச்சு திரைப்படம் மூலம் நடிகை ஊர்வசியை அறிமுகப்படுத்தியவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏன் ஊர்வசி வரவில்லை என்கிற கேள்விகளும் இருந்தன.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஊர்வசியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஊர்வசி, “நான் அங்கு வந்தால் என்ன உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பேன் எனத் தெரியும். அவரை அப்படி படுக்கையில் பார்க்க என்னால் முடியாது. என் எமோஷனலை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது. அவரின் மிகச்சிறந்த மாணவி நான். என் கேலி, கிண்டல்களைத்தான் விரும்புவார். நான் அழுவது அவருக்குப் பிடிக்காது. அவர் எங்கும் போகவில்லை. என் மனதில் கோட் சூட் போட்டபடி அழகாக இருக்கிறார். அது போதும்” என்றார்.

Actress Urvashi has spoken about not paying her last respects to the late director Bhagyaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.