ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தெலுங்கு சினிமாவில் முதல்முறை... ரூ.100 கோடி வசூலை நோக்கி சமந்தாவின் எங்கள் தங்கம்!

நடிகை சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்படத்தின் வசூல் சாதனை குறித்து...

Poster of the movie Engal Thangam aka Maa Inti Bangaaram

எங்கள் தங்கம் படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / சமந்தா

Published On :5 ஜூலை 2026, 12:35 pm IST

நடிகை சமந்தாவின் எங்கள் தங்கம் (தெலுகில் மா இன்டி பங்காரம்) திரைப்படம் ரூ.92 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமானார். பின்னர், விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

தற்போது ஹிந்தி, தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனமான டரராலா பிக்சர்ஸ் சார்பில் மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

சமந்தாவின் கணவர் எழுதிய இந்தப் படத்தினை பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த ஜூன் 19ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மூன்று வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.92 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு நேற்றிரவு போஸ்டர் வெளியிட்டிருந்தது.

அந்த போஸ்டரில், தெலுங்கு சினிமா வரலாற்றில் பெண் நாயகி படங்களில் அதிகம் வசூலித்து, முதலிடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

A first in Telugu cinema... Samantha's 'Engal Thangam' aka Maa Inti Bangaaram heading towards the ₹100 crore mark!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.