ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் துருவ் நாயகனாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Published On :2 ஜூலை 2026, 1:02 pm IST

நடிகர் துருவ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படத்தால் நடிகர் துருவ்வுக்குப் பெரிய வெளிச்சம் கிடைத்ததுடன் இந்த வெற்றியால் தமிழின் முன்னணி நடிகர்கள் வரிசையிலும் துருவ் இடம்பிடித்தார்.

மேலும், பைசன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்ததால் துருவ்வின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் துருவ்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் துருவ்.

தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 4-வது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் துருவ் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ், சாய் தீனா உள்ளிட்டோரும் நடிப்பதாகத் தெரிகிறது. நாயகி - ருக்மணி வசந்த் (தகவல்).

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதைப் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். பூஜையில், இயக்குநர்கள் ரவிக்குமார், ஆதிக் ரவிச்சந்திரன், கீர்த்தீஸ்வரன் (டியூட்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

The pooja for the new film starring actor Dhruv as the lead has taken place.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.