
விமர்சனங்களும் கண்காணிப்புகளும் கடந்து சென்றுவிடும்: நடிகர் துருவ்
நடிகர் துருவ் தன் மீதான விமர்சனங்கள் குறித்து பேச்சு...
துருவ்
நடிகர் துருவ் விக்ரம் தன் மீதான விமர்சனங்களுக்குக் குறித்து பதிலளித்துள்ளார்.
நடிகர் துருவ் பைசன் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
இதற்கிடையே, நடிகை அனுபமாவுக்கும் துருவ்க்கும் காதல் பிரிவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் விதமாக நடிகை அனுபமா பரமேஸ்வரன், நேர்காணலில் காதல் என்கிற பெயரில் துன்புறுத்தலைச் சந்தித்ததாகக் கூறினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், நிகழ்வில் பேசிய நடிகர் துருவ், “இந்தத் தொழிலை நான் ஏற்றுக்கொண்டபோது, ஆரம்பத்திலேயே இதனால் விமர்சனங்களும் கண்காணிப்பும் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். அது என்னை பாதிக்கவில்லை என்று என்னால் சொல்ல முடியாது. நீங்கள் நேசிக்கும் ஒவ்வொருவரையும் மிகவும் உறுதியாகப் பாதுகாப்பது முக்கியம்.
நீங்கள் உண்மையுடன் இருக்கும்போது, உங்களை நிலைநிறுத்துவது எது என்பதை நீங்கள் அறிந்திருக்கும்போது, அந்த விமர்சனங்களும் கண்காணிப்பும் கடந்து போய்விடும். இந்தப் பயணம் முழுவதும் என்னை ஊக்கப்படுத்திய சிறிய ஆதரவாளர்கள் எனக்கும் இருந்தார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Dhruv Vikram has responded to the criticism directed at him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






