வாரணாசி வெளியீட்டுத் தேதியை உறுதி செய்தார் ராஜமௌலி!
இயக்குநர் ராஜமௌலியின் வாரணாசி திரைப்பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...


இயக்குநர் ராஜமௌலியின் “வாரணாசி” திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “வாரணாசி”.
மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள்முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடிகர்கள் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் புதிய படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கின்றார்.
இந்தத் திரைப்படத்தின் வெளியீடு குறித்து சமூக ஊடகங்களில் வெவ்வேறு கருத்துகள் நிலவியதைத் தொடர்ந்து படக்குழுவினர் இன்று (ஜன. 30) மௌனம் கலைத்துள்ளனர்.
இந்த நிலையில், “வாரணாசி” திரைப்படம் வரும் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அறிவித்துள்ளார். மேலும், இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...