/

சூர்யா, தனுஷ், கார்த்தி, விஜே சித்து..! 2026-ன் முன்னணி படங்களைக் கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி படங்களின் ஓடிடி உரிமம் குறித்து...

News image
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்...
Updated On :15 ஜனவரி 2026, 9:45 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களின் நடிப்பில் 2026 ஆம் ஆண்டில் வெளியாகும் திரைப்படங்களின் உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, தனுஷ், கார்த்தி, ரவி மோகன், அதர்வா ஆகியோரது திரைப்படங்கள் நிகழாண்டில் (2026) திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

இப்படங்கள் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில், பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யாவின் 46 ஆவது திரைப்படம் மற்றும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 55 ஆவது திரைப்படம் ஆகிய படங்களின் ஓடிடி உரிமங்களை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதேபோல், இயக்குநர் தமிழ் - நடிகர் கார்த்தி கூட்டணியின் “மார்ஷல்”, நடிகர் விஷ்ணு விஷால் - இயக்குநர் செல்லாவு அய்யாவு கூட்டணியின் “கட்டா குஸ்தி -2”, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கும் “இதயம் முரளி” ஆகிய திரைப்படங்களின் ஓடிடி உரிமங்களையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி நாயகனாக நடிக்கும் “டயங்கரம்”, நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ”ஆன் ஆர்டினரி மேன்” மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகும் “வித் லவ்” ஆகிய படங்களும் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.