தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமணம் குறித்து...

News image

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் நடிகர் விஜய் தேவரகொண்டா - Insta/Vijay Devarakonda

Updated On :26 பிப்ரவரி 2026, 2:17 pm

பிரபல நடிகர்களும் நீண்ட நாள் காதலர்களுமான விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் வியாழக்கிழமை (பிப். 26) நடைபெற்றுள்ளது.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்த நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானின் உதய்ப்பூரிலுள்ள நட்சத்திர மாளிகையில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டனர்.

ஏற்கெனவே, இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு பத்திரிக்கை வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், இன்று அவர்கள் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக, விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிகழ்வை ஆவணப்படமாக்குவதற்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The wedding of famous actors Vijay Deverakonda and Rashmika Mandanna took place on Feb. 26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.