/

லோகா - 2 படப்பிடிப்பு எப்போது? கல்யாணி பதில்!

லோகா - 2 குறித்து கல்யாணி பிரியதர்ஷன்...

News image
கல்யாணி பிரியதர்ஷன்
Updated On :18 பிப்ரவரி 2026, 9:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லோகா - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான ’லோகா சேப்டர் 1' திரைப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கவனிக்கப்பட்டது. இதில், கதை நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.

இவரின் ஆக்சன் காட்சிகளும் கதையில் சொல்லப்பட்ட தொன்மக் கதையும் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றன.

இப்படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்களும் தயாராகின்றன. அதில், மம்மூட்டி, துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், கல்யாணி பிரியதர்ஷனிடம் லோகா - 2 குறித்து அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு கல்யாணி, ‘லோகா - 2 கதையை எழுதி வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு இந்தாண்டு செப்டம்பரில் துவங்கும். இந்தப் பாகத்திலும் நான் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.