டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரூ. 20 கோடி நஷ்டஈடு... தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரபல நிறுவனம்!

தனுஷுக்கு நோட்டீஸ்....

News image
தனுஷ்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்க திட்டமிட்டிருந்த திரைப்படத்திற்காக பிரபல தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் தனுஷ் பா. பாண்டி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்கி, நடிக்கத் திட்டமிட்டிருந்த திரைப்படம் நான் ருத்ரன். இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.

இதற்காக நடிகர்கள் தனுஷ், நாகர்ஜூனா, எஸ்ஜே சூர்யா ஆகியோருக்கு முன்பணம் கொடுத்து, தயாரிப்பு பணிகளுக்கான செலவுகளையும் அந்நிறுவனம் செய்ததாகத் தெரிகிறது.

ஆனால், திட்டமிட்ட கால்ஷீட்டை கொடுக்கமால் தனுஷ் இழுத்தடித்து வேறுவேறு திரைப்படங்களில் நடிக்கச் சென்றதால், நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதனால் உடனடியாக தனுஷ் ரூ. 20 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.

தனுஷ் தரப்பிலிருந்து நீதிமன்றம் செல்வார்களா இல்லை மீண்டும் இப்படத்திற்காக கால்ஷீட் கொடுத்து இப்படத்தில் கவனம் செலுத்துவாரா? உடனடியாக பதில் தெரிய வேண்டுமென காத்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.