டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

2013-ல் நடனக் கலைஞர், 2026-ல் நாயகி! சுதா சந்திரன் உடனான உறவைப் பகிர்ந்த நடிகை!

நடனக் கலைஞராக இருந்து முன்னணி நாயகியாக வைஷ்ணவி வளர்ந்துள்ளது குறித்து...

News image
சுதா சந்திரன் உடன் வைஷ்ணவி- படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :16 பிப்ரவரி 2026, 10:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை சுதா சந்திரன் முன்பு நடனமாடி அவரிடம் மதிப்பெண்களைப் பெற்ற நடனக் கலைஞராக இருந்த நடிகை வைஷ்ணவி, நடிகையாகி அவருடனே நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இது தொடர்பான விடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வைஷ்ணவி, சுதா சந்திரனிடமும் அவர் முன்பு நடனமாடிய விடியோவைக் காட்டி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை வைஷ்ணவி நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார்.

இத்தொடரில் கிராமத்துப் பெண்ணாக சிறந்த நடிப்பை வழங்கிவரும் வைஷ்ணவி, நடனக் கலைஞராவார். 2013ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு படிப்படியாக சின்ன திரையில் அடுத்தடுத்து திறமைகளை வளர்த்துக்கொண்டார்.

வைஷ்ணவி

வைஷ்ணவி

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நடன நிகழ்ச்சியில் நடுவராகக் கலந்துகொண்ட சுதா சந்திரன் முன்பு நடனமாடியதாகவும், தற்போது அவருடனே நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும் வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் சுதா சந்திரன் முன்பு ஆடி, மதிப்பெண்கள் பெற்ற விடியோவை அவருக்கு காண்பித்து மகிழ்ச்சியை வைஷ்ணவி பகிர்ந்துகொண்டார்.

2013ல் நடனக் கலைஞராக / 2026-ல் நாயகியாக வரை

2013ல் நடனக் கலைஞராக / 2026-ல் நாயகியாக வரை

இந்த விடியோவைக் கண்ட ரசிகர்கள், நடனக் கலைஞராக இருப்பது வைஷ்ணவிதானா? என்றும் வியப்படைவதுடன் மட்டுமின்றி நடனக் கலைஞராக இருந்து தற்போது முன்னணி தொடரில் நாயகியாக உயர்ந்துள்ள வைஷ்ணவியின் உழைப்பை பாராட்டியும் வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.