/

திடீரென காதல் வருமா? விடியோ வெளியிட்ட சூர்யா!

மௌனம் பேசியதே மறுவெளியீடு...

News image
சூர்யா
Updated On :9 பிப்ரவரி 2026, 10:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

மௌனம் பேசியதே திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்காக சூர்யா புரோமோ விடியோவை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான மௌனம் பேசியதே திரைப்படம் காதலர் நாள் மறுவெளியீடாக வருகிற பிப். 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கடந்த 2002-ல் வெளியான இப்படம் அப்போதே பல பாராட்டுகளைப் பெற்று வெற்றிப்படமானது.

இந்த நிலையில், மறுவெளியீட்டுகாக சூர்யா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்றும் மௌனம் பேசியதே திரைப்படத்தைப் பலரும் கொண்டாடுகிறார்கள். என் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. 3 நாயகிகள் நடித்திருந்தாலும் யாரையும் கட்டிப்பிடிக்காமலேயே உருவான காதல் திரைப்படம். இதன் மறுவெளியீட்டுக்காக நானும் காத்திருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.