டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேபிமா... பூஜா ஹெக்டேவை ஆச்சரியப்படுத்திய சிறுவன்!

மோனிகா பாடலுக்கு நடனமாடி அசத்திய சிறுவன்...

News image
பூஜா ஹெக்டே
Updated On :8 பிப்ரவரி 2026, 12:24 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடனமாடிய சிறுவன் வைரலாகியுள்ளார்.

கூலி திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்கு நடனமாடி பலரையும் ஈர்த்தார். அனிருத் இசையில் உருவான அப்பாடல் பல மில்லியன் ஹிட் அடித்ததுடன் கடந்தாண்டின் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகவும் இடம் பிடித்தது.

இந்த நிலையில், சென்னை தனியார் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்ட பூஜா ஹெக்டேவை மோனிகா பாடலுக்கு நடனமாட அழைத்ததும் அவர் நடனமாடினார்.

ஆனால், எதிர்பாராத விதமாக பூஜாவுக்கு முன்னால் ஆடிய சிறுவன் மிக வேகமான அசைவுகளைக் கொடுத்து அசத்தினார். அச்சிறுவனின் அபாரமான நடனத்தைக் கண்டு பூஜாவும் ஆடுவதை நிறுத்திவிட்டு கவனித்தார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதுடன் பலரும் அச்சிறுவனைப் பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.