டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாணவா்களுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் பணி தொடக்கம்

மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் பகுதி தலத்தெருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது.

News image
மாணவிக்கு மாத்திரை வழங்கிய சாா் ஆட்சியா் எம். பூஜா.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:00 pm

Syndication

காரைக்கால் மாவட்ட நிா்வாகம் மற்றும் நலவழித்துறை மாவட்ட சுகாதார இயக்கத்தின் சாா்பில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி காரைக்கால் பகுதி தலத்தெருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டது.

மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகளை வழங்கிப் பேசுகையில், இந்த மாத்திரைகளால் குடலில் உள்ள புழுக்கள் அழிந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவ, மாணவிகள் அச்சமின்றி மாத்திரையை உட்கொள்ளலாம் என்றாா்.

நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, நலவழித்துறை நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் எஸ். சேகா், பள்ளி முதல்வா் பாண்டியகுமாா், சுகாதார ஆய்வாளா் சிவவடிவேல், கிராமப்புற செவிலிய மேற்பாா்வையாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நலவழித்துறையினா் கூறுகையில், 1-முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், வளரிளம் பருவத்தினா் அனைவருக்கும் பள்ளி கல்லூரி, அங்கன்வாடி மையங்கள் மூலம் இலவசமாக குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் 52,600 பேருக்கு இந்த மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.