ஒரே நாளில் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் திரைக்கு வருகிறது.
பான் இந்தியத் திரைப்படங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்திய வணிகைகளை மட்டுமல்லாது உலகளவில் கவனம் பெற, ஆக்சன்களுடன் கூடிய திரைக்கதைகள் அதிகரித்து வருகின்றன.
அப்படி, கேஜிஎஃப் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் யஷ் அதிக பட்ஜெட்டில் உருவாகும் டாக்ஸிக்கில் நடித்து முடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதேபோல், ஹிந்தியில் மட்டுமே உருவானாலும் இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்ததுடன் ரூ. 1300 கோடி வரை வசூலித்து மிரட்டியது துரந்தர். நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இப்படம் ஓடிடியில் வெளியாகியும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இதன், இரண்டாம் பாகம் பான் இந்திய வெளியீடாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், டாக்ஸிக் மற்றும் துரந்தர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் (மார்ச் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.
இரண்டு திரைப்படங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் ஏதேனும் ஒரு திரைப்படம் வெளியீட்டை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காதலர் நாளில் மறுவெளியீடாகும் திரைப்படங்கள்!
தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

ஓடிடி வெளியீட்டிலும் கொண்டாடப்படும் துரந்தர்!

ஓடிடியில் துரந்தர்..! தமிழ் உள்பட 3 மொழிகளில் ரிலீஸ்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

