சிவகார்த்திகேயன் பாடியுள்ள தாய் கிழவி பட முதல் பாடல்!
தாய் கிழவி திரைப்படத்தின் முதல் பாடலின் வெளியீடு குறித்து...


நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தாய் கிழவி” திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் “தாய் கிழவி”.
இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில், நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள “தாய் கிழவி” படத்தின் “தாய் கிழவி வரா” எனும் முதல் பாடல், நாளை (பிப். 5) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் முனிஷ்காந்த், பாலசரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார், ரெயிச்சல் ரிபேக்கா ஆகியோர் நடித்துள்ள தாய் கிழவி படம் வரும் பிப். 20 அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...