டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

எனக்கே ஸ்கெட்சா? வைரலாகும் கௌதம் மேனனின் பேச்சு!

இயக்குநர் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தினைக் குறித்து பேசியிருப்பதாவது...

News image
கௌதம் வாசுதேவ் மேனன். - EPS
Updated On :3 பிப்ரவரி 2026, 1:28 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் கௌதம் மேனன் தான் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து பேசியுள்ளார்.

அவரது பேச்சில், “என்ன, எனக்கே ஸ்கெட்சா?” என்று அவரது படத்தின் பாணியிலேயே பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி, 8 ஆண்டுகளுக்கும் மேலாக துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட நிதி பிரச்னையால் இன்னும் திரைக்கு வராமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசர், டிரைலர் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தபோதும் பலமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு இறுதி நேரத்தில் வெளியீடு சிக்கல்களைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில், கௌதம் மேனன் 25ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சியில் இப்படம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார். அதில் பேசியிருப்பதாவது:

என்ன, எனக்கே ஸ்கெட்சா? மிகப்பெரிய மேடையில் அறிவிப்பேன். விரைவில் வெளியாகும். (இந்த ஆண்டா அல்லது அடுத்த ஆண்டா? என ரசிகர்கள் கேள்வி கேட்டனர்).

எனக்குத் தெரிந்து விரைவில் என்றால், இந்தாண்டுதான் எனப் பேசினார்.

இதுபோல அவர் பலமுறை பேட்டியில் கூறி, பலமுறை தள்ளிப் போயிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.