மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

சாய் அபயங்கரின் ரதிமா பாடல் வெளியானது!

சாய் அபயங்கரின் புதிய பாடலான ரதிமா இன்று வெளியாகியுள்ளது.

சாய் அபயங்கர் / பாக்யஸ்ரீ போர்ஸ்

Updated On :

சாய் அபயங்கரின் ரதிமா பாடல் இன்று வெளியாகியுள்ளது.

இண்டி இசை எனப்படும் தனியிசைப் பாடல்கள் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாய் அபயங்கர். இவரது முதல் பாடலான ’கட்சி சேர’ மிகப்பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பாடல்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ட்யூட் படம் மூலம் தமிழில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அடுத்தடுத்து 10 முக்கியமான படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான கருப்பு திரைப்படத்தில் இவரின் இசை பெரிதும் பேசப்பட்ட நிலையில், அதே சமயம் வெளியான இவரது ‘பவழ மல்லி’ பாடலும் பெரியளவில் ஹிட் ஆனது. அப்பாடலில், இவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சாய் அபயங்கரின் 6-வது தனியிசைப் பாடலான ’ரதிமா’ இன்று வெளியாகியுள்ளது. வழக்கமாக முன்னணி நடிகைகளைத் தன் பாடல்களில் நடிக்க வைக்கும் இவர், இம்முறை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸை ஆட வைத்துள்ளார்.

ரதிமா பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். தேஜே பரஜ்வாஜ் இயக்கியுள்ளார்.

இதற்கு அடுத்ததாக, சாய் இசையமைத்துள்ள விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1 அன்று வெளியாகவுள்ளது.

Summary

Sai Abhyankar's new song, 'Radhimaa', has been released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.