
த்ரிஷ்யம் - 4 உருவாகிறதா... தயாரிப்பாளர் சொல்வது என்ன?
த்ரிஷ்யம் 4-வது பாகம் உருவாகவிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

த்ரிஷ்யம் போஸ்டர்
த்ரிஷ்யம் 4-வது பாகம் உருவாகவிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகர் மோகன்லால் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் கூட்டணியில் உருவான திரிஷ்யம் திரைப்படத்தின் மூன்று பாகங்களும் பெரிய வெற்றியைப் பெற்றன.
ஜார்ஜ் குட்டி என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தன் மகளுக்கு நேரும் பாலியல் சீண்டல் காரணமாக ஒரு கொலையைச் செய்யும் ஜார்ஜ் குட்டி, கொலை செய்யப்பட்டவரின் பிணத்தை எப்படி காவல்துறைக்குத் தெரியாமல் மறைத்தார் என்பதாக முதல் பாகம் முடியும்.
அதன் தொடர்ச்சியாக நடத்தப்படும் விசாரணைகளும், அவர் மீண்டும் தனது சாதுர்யத்தால் எவ்வாறு அந்தப் பிணத்தினை யாருக்கும் தெரியாமல் மறைத்தார் என்றும் அடுத்த இரு பாகங்களில் காட்டியிருப்பார்கள்.
த்ரிஷ்யம் மூன்றாவது பாகம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரூ. 200 கோடி வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், முதல் இரு பாகங்களை விட மூன்றாவது பாகம் சுமாராக இருந்ததாக விமர்சனங்களும் வந்தன.
இந்த நிலையில், த்ரிஷ்யம் திரைப்படத் தொடரின் 4-வது பாகம் கண்டிப்பாக உருவாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் நடைபெற்ற மழவில் மனோரமா விருது விழாவில் பேசிய ஆண்டனி பெரும்பாவூர், “த்ரிஷ்யம் படத்தின் நான்காவது பாகம் கண்டிப்பாக வரும். இதை நான் மனதாரச் சொல்கிறேன்,” என்றார்.
இதுபற்றி, மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோரிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
முன்னதாக, ஒவ்வொரு பாகத்தின் முடிவிலும் அடுத்த பாகத்துக்கான வேலையைத் தொடங்குமாறு ஆண்டனி கூறுவார் என ஜீத்து ஜோசப் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கான வலுவான திரைக்கதையை மையமாகக் கொண்டு அது உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
த்ரிஷ்யம் 3-வது பாகத்தின் ஹிந்தி ரீமேக் வருகிற அக்டோபர் 2 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில், 4-வது பாகம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது சமூக ஊடகங்களில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
Summary
The producer of the film Drishyam has announced that a fourth part is in the works.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







