ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாழ்ந்து உணர வேண்டிய திரைப்படம் ஒடிசி... அட்லி பாராட்டு!

தி ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் அட்லி...

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:10 pm IST

இயக்குநர் அட்லி, இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் தி ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

கிரேக்க காவியமான ஹோமரின் ’தி ஒடிசி’ கவிதையைத் தழுவி இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் ஒடிசி திரைப்படத்தை மிகச் சவாலாக முழுமையாக ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கினார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஜூலை 17ஆம் தேதி இப்படம் வெளியானது. தொழில்நுட்ப ரீதியாக ஆச்சரியப்படுத்தினாலும் திரைக்கதையால் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் அட்லி இப்படம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நாம் பார்க்கிற திரைப்படங்களில் நம்மை வியக்க வைக்கும் படங்கள் உண்டு. ஆனால், அரிதாகச் சில படங்கள் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். 'தி ஒடிஸி' அப்படி ஒரு அனுபவத்தைத் தந்தது.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் கதை சொல்லும் விதம் பிரமிக்க வைக்கிறது. காட்சிகள் தனக்கென ஒரு மொழியில் பேசுகின்றன. கேமராவே கதையைச் சொல்லும் இன்னொரு கதாபாத்திரமாக மாறுகிறது.லுட்விக்கின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லை, அது உங்கள் இதயத் துடிப்புக்குள் நுழைந்து, உணர்வாகவே மாறுகிறது. எல்லாவற்றையும் விட என்னுள் ஆழமாகத் தங்கியது மிகவும் தனிப்பட்ட ஒரு உணர்வு.

ஒரு படத்தின் முன் திரையரங்கில் இருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடும் அந்தத் தருணம்... அதுதான், ஒரு உண்மையான எபிக் (EPIC). தி ஒடிசி எனக்கு அப்படித்தான் இருந்தது. சில திரைப்படங்கள் பார்ப்பதற்கு மட்டுமே. ஆனால், 'தி ஒடிசி' போன்ற காவியங்கள் வாழ்ந்து உணர வேண்டியவை.” எனத் தெரிவித்துள்ளார்.

Director Atlee has praised director Christopher Nolan's film The Odyssey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.