ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வியப்பில் ஆழ்த்தும் உருவாக்கம்! ஓடிடியில் வெளியான தி ஒடிசி மேக்கிங் விடியோ!

தி ஒடிசி மேக்கிங் விடியோ வெளியானது...

Published On :15 ஜூலை 2026, 11:53 am IST

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஒடிசி திரைப்படத்தின் மேக்கிங் விடியோ ஓடிடியில் வெளியாகியுள்ளது.

உலகின் மிகச்சிறந்த இயக்குநராக கருதப்படும் கிறிஸ்டோஃபர் நோலன் தற்போது ஒடிசி என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் சிறப்பு திரையிடலை மும்பையில் கண்ட பலரும் பாராட்டி வருகின்றனர். உலகளவிலுள்ள பல ஐமேக்ஸ் திரைகளில் இதனைக் காண ரசிகர்கள் காத்திருப்பதால் ஒடிசி பெரிய வணிகத்தைச் செய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். எப்படி ஐமேக்ஸ் கேமராவில் கஷ்டமான காட்சிகளையும் எடுத்தோம் என்பதையும் அக்கேமராவில் ஒலியமைப்புக்குக்கு பட்ட சிரமங்கள் குறித்தும் இதில் பேசியுள்ளனர்.

மேலும், மொராக்கோ, கிரீஸ், இத்தாலி, ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் முக்கியமான காட்சிகளை எடுத்ததையும் பகிர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள், நோலன் ஒரு மாஸ்டர் என்பதற்கு இதைவிட உதாரணம் என்ன இருக்க முடியும் என பாராட்டி வருகின்றனர்.

A behind-the-scenes video of the film directed by Christopher Nolan has been released on OTT.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.