ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரவி தேஜா - பிரியா பவானி ஷங்கரின் இருமுடி கட்டு பட டிரைலர்!

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள இருமுடி கட்டு படத்தின் டிரைலர் குறித்து...

A scene from the movie Irumudi Kattu.

இருமுடி கட்டு படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 8:33 pm IST

நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ’இருமுடி கட்டு’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகி, அவரது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா பவானி ஷங்கர், சாய் குமார், பேபி நக்‌ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ரவி தேஜாவின் நடிப்பில் கடைசியாக ஜனவரியில் பாரத மஹாசயுலக விக்ஞாயப்தி என்ற படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் தெலுங்கில் இருமுடி எனவும் தமிழில் இருமுடி கட்டு என்ற பெயரிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடைசியாக இயக்குநர் ஷிவ நிர்வாணா 2023ல் இயக்கிய குஷி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு நாக சைதன்யாவுடன் படம் எடுப்பதாக இருந்தது. பின்னர் கைவிடப்பட்டது.

இந்தப் படம் ஆக.21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஒன்றாக இல்லாமல் புதுமையாக இருப்பதாக ரவி தேஜா ரசிகர்கள் இந்தப் படத்தின் டிரைலரை சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Summary

Ravi Teja, Priya Bhavani Shankar starring Irumudi Official Tamil Trailer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.