ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நெல்சன், ரஞ்சித், மிஷ்கின்..! தமிழ் இயக்குநர்களுக்கு மட்டும் டிசி சிறப்புக் காட்சி!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு மட்டும் திரையிடப்பட்ட டிசி பட சிறப்புக் காட்சி...

lokesh kanagaraj dc

டிசி படத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி

Published On :6 ஆகஸ்ட் 2026, 9:31 pm IST

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களுக்கு மட்டும் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் டிசி திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம் “டிசி”. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிவிப்பு வெளியான நாள் முதல் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

டிசி படம் நாளை (ஆக. 7) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களுக்கு மட்டும் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளதாக, படக்குழு இன்று அறிவித்துள்ளது.

இந்தச் சிறப்புக் காட்சியில், தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் சி, பா. ரஞ்சித், ஹெச். வினோத், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, பார்த்திபன், ஆதிக் ரவிச்சந்திரன், ராஜ்குமார் பெரியசாமி, மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சேரன், ஆர்.ஜே. பாலாஜி, ஆர்.கே. செல்வமணி, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Summary

A special screening of the DC film marking Lokesh Kanagaraj's debut as a lead actor has been held exclusively for Tamil film directors.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.