ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நடிகர் ஜீவாவின் தகப்பன் முதல் தோற்ற போஸ்டர்!

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் தகப்பன் திரைப்பட போஸ்டர்...

நடிகர் ஜீவா

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:54 pm IST

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் தகப்பன் திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜீவாவுக்கு பிளாக், தலைவர் தம்பி தலைமையில் ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமைந்ததால் இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால் ஜீவாவின் படங்களின் மீது எதிர்பார்ப்பும் இருக்கும். தற்போது, கிடா படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் மதுரையைப் பின்னணியாகக் கொண்ட கதையில் நடித்து வருகிறார். தகப்பன் எனப் பெயரிட்டுள்ள இப்படத்தை மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

Story image

இந்த நிலையில், இதன் முதல் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். தந்தை - மகனுக்கு இடையேயான பாசக் கதையாக இது உருவாகி வருகிறது. மேலும், இந்தாண்டு டிசம்பர் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வருவதையும் அறிவித்துள்ளனர்.

The first-look poster of the film Thagappan, starring actor Jiiva, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.