ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

படப்பிடிப்பில் நடிகை ரஷ்மிகாவுக்கு பலத்த காயம்!

படப்பிடிப்பில் நடிகை ரஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டது குறித்து...

Rashmika Mandanna

ரஷ்மிகா மந்தனா - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 11:44 am IST

மைசா படத்தின் படப்பிடிப்பில் நடிகை ரஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் மைசா என்ற படத்தில் கதைநாயகியாக நடிகை ரஷ்மிகா நடித்து வருகிறார். கதைநாயகியை மையமாக எடுக்கப்படும் இந்தப் படத்தில் கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ரஷ்மிகா நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மைசா உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

கேரளத்தின் அதிரப்பள்ளியின் காட்டுப்பகுதியில் மைசா படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும்நிலையில், ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பில் ரஷ்மிகா நடனமாடும்போது எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, ரஷ்மிகாவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முழுமையாக குணமடைய 6 வாரங்களுக்குக் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Summary

Rashmika Mandanna Suffers Hip Injury, Out Of Action For 6 Weeks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.