நடிகர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லீடர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்திருந்த லெஜண்ட் திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் கூட்டணியில் லெஜண்ட் சரவணன் லீடர் படத்தின் நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபிலேயே 2 கோடி பார்வைகளைக் கடந்தது.
முழு ஆக்சன் திரைப்படமாக உருவான லீடர் திரைப்படம், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், லீடர் திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The OTT release date for the film Leader, starring actor Legend Saravanan, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சதீஷின் முஸ்தபா முஸ்தபா படத்தின் வெளியீட்டுத் தேதி!

தி கேரளா ஸ்டோரி - 2: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஓடிடியில் எல்ஐகே எப்போது?

ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை



