தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சதீஷின் முஸ்தபா முஸ்தபா படத்தின் வெளியீட்டுத் தேதி!

முஸ்தபா முஸ்தபா படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

News image

முஸ்தபா முஸ்தபா பட போஸ்டர். - படம்: எக்ஸ்

Updated On :29 ஏப்ரல் 2026, 12:14 pm

நடிகர் சதீஷின் முஸ்தபா முஸ்தபா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம் முஸ்தபா முஸ்தபா.

மேலும், இந்தப் புதிய படத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, விஜே பார்வதி, விஜே மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு, எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

திருமணத்துக்கு தயாரான சதீஷ் தொடர்பான விடியோ ஒன்று இணையத்தில் கசிந்த நிலையில், தனது நண்பர்களின் உதவியுடன் அதை மறைக்க எடுக்கும் முயற்சிகள், அதனால் ஏற்படும் குழப்பங்களை மையப்படுத்தி நகைச்சுவை பாணியுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முஸ்தபா முஸ்தபா திரைப்படம் ஆஹா ஓடிடியில் ஏப். 30 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for actor Sathish's film Mustafa Mustafa has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.