/

முடிவுக்கு வரும் 3 மதிய நேர தொடர்கள்!

சின்ன திரையில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் முடிவுக்கு வரவுள்ளது குறித்து...

News image

டெல்னா டேவிஸ், நிமோஷிகா, ஹரிகா சாது - இன்ஸ்டாகிராம்

Updated On :28 ஏப்ரல் 2026, 11:05 am

சின்ன திரையில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரவுள்ளன. தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதால், விரைவில் அந்த 3 தொடர்களும் முடிவடையவுள்ளன.

சன் தொலைக்காட்சியில் பிரைம் டைம் எனப்படும் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு இருப்பதைப்போன்று, மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இல்லத்தரசிகளின் ஆதரவால் மதிய நேரங்களிலும் புதிது புதிதாக தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமான மதிய நேரத் தொடர்களான ஆடுகளம், மணமகளே வா, புனிதா ஆகிய தொடர்கள் விரைவில் முடிவடையவுள்ளன.

ஆடுகளம்

திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஆடுகளம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை டெல்னா டேவிஸ் நாயகியாகவும் சல்மானுல் பாரிஸ் நாயகனாகவும் நடிக்கிறார்.

மேலும், காயத்ரி ஜெயராம், சச்சு, காத்தாடி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் இத்தொடர், ஜூன் மாதத்திற்கு முன்பாகவே நிறைவடையவுள்ளது.

மணமகளே வா

ஹரிகா சாது, விக்கி ரோஷன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் மணமகளே வா தொடரும் விரைவில் நிறைவு பெறவுள்ளது. சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை பிற்பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடர், 500 எபிஸோடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருவதால், விரைவில் இத்தொடர் முடிவடையவுள்ளதாகத் தெரிகிறது.

புனிதா

கண்ணான கண்ணே தொடரில் நடித்து புகழ் பெற்ர நிமோஷிகா ராதாகிருஷ்ணன் - சுரேந்தர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புனிதா தொடரும் விரைவில் நிறைவடையவுள்ளது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணிக்கு புனிதா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 450 எபிஸோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர், விரைவில் முடியவுள்ளது.

இவ்வாறு சன் தொலைக்காட்சியில் மதிய நேரங்களில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் விரைவில் முடியவுள்ளன.

Summary

aadukalam punitha manamagale va serial has end soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.