ரஞ்சித் நடிக்கும் தாய் மாமன் தொடரின் ஒளிபரப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அண்ணன் - தங்கை இடையேயான பாசப்பிணைப்பை மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக, தாய் மாமன் உறவை மையப்படுத்தி விஜய் தொலைக்காட்சியில் புதிய தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடருக்கு தாய் மாமன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாய் மாமன் தொடர் விஜயகுமார் - ராதிகா நடித்திருந்த கிழக்குச் சீமையிலே படத்தின் பாணியில் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரில் நடிகர் ரஞ்சித் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரில் தேவிப்பிரியா, ராஜ் கபூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அண்ணன் பாத்திரத்தில் ரஞ்சித் நடிக்கிறார். தங்கை பாத்திரத்தில் தேவி பிரியா நடிக்கிறார். இவர்களுக்கிடையே நடக்கும் பாசப் போராட்டம், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
மனோஜ் இயக்கும் இந்தத் தொடரை பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரின் மூலம் நடிகர் ரஞ்சித் சின்ன திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று 70 நாள்கள் வரை இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தாய் மாமன் தொடர் மூலம் சின்ன திரையில் மீண்டும் தோன்றுகிறார் நடிகர் ரஞ்சித். கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்படும் இந்தத் தொடரில் தாய் மாமன் பாத்திரத்தில் ரஞ்சித் நடிக்கிறார்.
தாய் மாமன் தொடரின் முன்னோட்டக் காட்சிகள் இணையத்தில் வைராலான நிலையில், வரும் ஏப். 27 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The broadcast date for the series Thai Maman, starring Ranjith, has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு நேரத்தில் மீண்டும் ஒளிபரப்பாகும் இரு மலர்கள் தொடர்!

கிழக்குச் சீமையிலே பட பாணியில் புதிய தொடர்!

தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் நாகினி தொடரின் புதிய பாகம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



