பேட்ரியாட் திரைப்படத்தின் புதிய புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் “பேட்ரியாட்”. இப்படத்தை, முன்னணி இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் அசத்தலாக இருந்ததால் வெளியீட்டின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கான கலந்துரையாடல் விடியோ ஒன்றை தயாரித்துள்ளனர். அதில், படத்தின் நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன், இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம், இயக்குநர் மகேஷ் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு இப்படம் குறித்து பேசியுள்ளனர். இந்த விடியோ ஏப். 23 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதற்கான புரோமோவின் இறுதியில் நடிகர் மம்மூட்டி, அனைவரிடமும் சிறந்த நடிகர் யார்? எனக் கேட்கிறார். அதிலொருவர், ‘மம்மூட்டியா? மோகன்லாலா? என வினவுகிறார். இது ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Actor Mammootty's new promo has gone viral on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!

கவனம் பெறும் சூர்யா - 47 தோற்றம்!

நானும் பா. இரஞ்சித்தும் பரம்பரை எதிரிகளா? வைரலாகும் மோகன். ஜி பதிவு!

பாரடைஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நானி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


