தமிழ்ப் புத்தாண்டு நாளில் தனது மகளுக்கு பெயர் சூட்டியுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
தமிழில் ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றார்.
அதற்குப் பின் அவர் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேம காதல்’ 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ‘ஓ மணப்பெண்ணே’ ‘தாராளபிரபு’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, இவரை நாயகனாக மாற்றியது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது இவர் வினீத் வரபிரசாத் இயக்கும் தாஷமக்கான் படத்தில் நடித்து வருகிறார். நூறு கோடி வானவில் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதனிடையே, ஹரிஷ் கல்யாண் கடந்த 2022 ஆம் ஆண்டு நர்மதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த மார்ச் 3 ஆம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், தமிழ் வருடப்பிறப்பான இன்று(ஏப். 14) நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மகளுக்கு ’கிரியா ஹரிஷ்’ என்று பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Summary
Actor Harish Kalyan has named his daughter on Tamil New Year's Day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?

தன் மகளுக்கு நயோமிகா எனப் பெயரிட்ட ரன்தீப் ஹூடா!

தந்தையான மகிழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


