நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை ஷாலினி இணைந்து நடித்த அமர்க்களம் திரைப்படம் இந்த மாதம் மறுவெளியீடாக உள்ளது.
இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர்கள் அஜித் குமார், ஷாலினி நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் திரைப்படம் வெளியானது. காதல் படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அஜித்துக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது.
வெங்கடேஷ்வராலயம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் அஜித் வாழ்க்கையில் முக்கியமானதாக அமைந்தது. பரத்வாஜ் இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக இதனை மறுவெளியீடு செய்யவுள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் சரண் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு முரட்டுப்புயலை புரட்டிப் போட்ட தென்றல்! படத்திலும் படப்பிடிப்பிலும் ஊடாடிய காதல் பட்டவர்த்தனமானதை பறைசாற்றும் விதமாக மீண்டும் உங்கள் ரசிப்பை மீட்ட வருகிறது இந்த அமர்க்களம்!” எனக் கூறியுள்ளார்.
Summary
Epic love story Amarkalam re-releasing on this April.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கர படத்தினை நிராகரித்த பிருத்விராஜ்..! கதையில் மாற்றம் செய்த இயக்குநர்!

முதல் பாடல், வெளியீட்டு அப்டேட்டை பகிர்ந்த ஹாய் படக்குழு!
ஏகே - 64 இணை தயாரிப்பாளராக அஜித்?
இங்க பாரு... இணையத்தைக் கலக்கும் அஜித் - ஷாலினி பிரியாணி விடியோ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


