ஜன நாயகன் திரைப்படம் வெளியிடும் வரை காத்திருந்து திரையரங்குகளில் அனைவரும் காண வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எச். வினோத் இயக்கிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னை காரணமாக வெளியாகவில்லை.
தேர்தல் நிறைவடைந்தவுடன் மே மாதத்தில் திரையரங்குகளில் ஜன நாயகன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக மர்ம நபர்களால் இன்று அதிகாலை இணையத்தில் கசிந்துள்ளது.
இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் கசிந்தது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கானோரின் ஆர்வம், ரத்தம் மற்றும் வியர்வையின் மூலம் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து சட்டவிரோதமாக படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
திரையரங்கில் வெளியாகும் வரை பொறுத்திருந்து, திரையரங்குகளிலேயே படத்தைப் பார்வையிடுங்கள்.
திறமைகளையும், கடின உழைப்பையும், திரையுலகத்தையும் மதியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
X
Summary
Wait and watch the movie *Jananayagan* in theaters! — Sivakarthikeyan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் இருக்கும் திருடர்தான் ஜன நாயகனை வெளியிட்டுள்ளார்! சரத்குமார்

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!

ஜன நாயகன் திருட்டு எப்படி நடந்தது? சிந்திக்க வைக்கும் சேரனின் பதிவு!

ஜன நாயகன் படத்தை வெளியிட மாட்டோம்! தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



