மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இரவு நேரத்தில் மீண்டும் ஒளிபரப்பாகும் இரு மலர்கள் தொடர்!

இரு மலர்கள் தொடரின் மறு ஒளிபரப்பு குறித்து...

News image

இரு மலர்கள் தொடர். - படம்: யூடியூப்

Updated On :8 ஏப்ரல் 2026, 8:07 am

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரு மலர்கள் தொடர், மீண்டும் இரவு நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகைகள் ஹிமா பிந்து மற்றும் ஜீவிதா ஆகியோர் இணைந்து இரு மலர்கள் என்ற தொடரில் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இந்தத் தொடரின் நாயகனாக நடிகர் சந்தோஷ் நடிக்கிறார். இரு நாயகிகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

நண்பர்களான ஹிமா பிந்து, ஜீவிதா மற்றும் நாயகனான சந்தோஷ் இருவர்களுக்கிடையே நடக்கும் நிகழ்வுகளை பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

5 ஆண் நண்பர்களுடனான பெண்ணின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ரஞ்சனி தொடரில் ஜீவிதா மற்றும் சந்தோஷ் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் மீண்டும் இருமலர்கள் தொடரில் இணைந்துள்ளனர்.

இரு மலர்கள் தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மீண்டும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் தொடர்களில், இரு மலர்கள் தொடர் மக்கள் மனங்களைக் கவர்ந்து முன்னணி தொடராக இருந்து வருகிறது.

Summary

It has been announced that the series Iru Malargal, currently airing on Sun TV, will once again be broadcast during the night slot.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.