நடிகர் விஜய்யின் ரசிகர்கள் டிஎன் 2026 திரைப்படம் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இயக்குநர் உமாபதி ராமைய்யா இயக்கத்தில் உருவான டிஎன் 2026 திரைப்படம் முழுநீள அரசியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. சினிமா நடிகர் ஒருவர் கட்சி ஆரம்பித்து அரசியல்வாதியாக மாறும்படியாக கதை எழுதப்பட்டுள்ளது.
நாயகனான நட்டி நடராஜன் தவெக தலைவர் விஜய்யைப் போன்றே தோற்றமளிப்பத்துடன் டிரைலர் வசனங்களும் தவெக நிர்வாகிகளை நினைவுப்படுத்துவது போன்றே இருந்தது.
தொடர்ந்து, நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் இது தவெக மற்றும் விஜய்க்கு எதிரான படமல்ல என விளக்கமளித்தனர்.
முக்கியமாக, படத்தின் இயக்குநரான உமாபதி ராமைய்யா, “நடிகர் விஜய்யின் பெரிய ரசிகன் நான். அவர் ஒரு சிங்கம். அவரின் புகழை கெடுக்க இப்படத்தை எடுக்கவில்லை.” எனக் கூறியிருந்தார்.
இருப்பினும், யூடியூபில் இந்த டீசர் 40 லட்சம் பார்வைகளைப் பெற்றதுடன் விஜய் ரசிகர்களிடமும் திமுக கட்சியினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், டீசரில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த நாயகனைத் தாக்கிப் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும். சில வசனங்களில் ஆளும்கட்சியைத் தாக்கும்படியாகவும் இருந்தது.
இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் வெளியாகும் இப்படத்தில் ஒருவேளை மறைமுகமாக விஜய்யைத் தாக்கியிருந்தால் படத்தைப் புறக்கணிப்பதுடன் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டுமென சில ரசிகர்கள் எச்சரித்து பதிவிட்டு வருகின்றனர்.
டிஎன் 2026 திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Summary
some of vijay fans condenm tv 2026 movie teaser starring by natty natraj
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் முதல்வர்: நட்டி நட்ராஜ்

டாக்ஸிக் ஆழமான உளவியல் அம்சங்கள் கொண்ட திரைப்படம்: யஷ்
எனக்கெல்லாம் ரசிகர்களா... நன்றி சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



