மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈஸ்டர் நன்னாளில் வெளியாகும் பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள பள்ளிச்சட்டம்பி டிரைலர் குறித்து...

News image

பள்ளிச்சட்டம்பி படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / டொவினோ தாமஸ்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:16 am

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள பள்ளிச்சட்டம்பி டிரைலர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு ஏப்.5ஆம் தேதி காலை 11.11 மணிக்கு இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் 'பள்ளிச்சட்டம்பி’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், பிரசாந்த் அலெக்ஸாண்டர், வினோத் கெடமங்களம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தின் ’காட்டுச்செம்பகம்; எனும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படத்தின் டிரைலர் ஈஸ்டரில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைலர் போஸ்டர்.

டிரைலர் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / டொவினோ தாமஸ்.

இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Tovino Thomas Pallichattambi trailer update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.