நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் புதிய கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “கான் சிட்டி”. இப்படத்தில், நடிகர்கள் அனா பென், யோகி பாபு, வடிவுக்கரசி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், புதுமையான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கெனவே, “கான் சிட்டி” படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பொன்வண்ணன், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி மற்றும் மதன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழ்த் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர்களான தம்பி ராமையா மற்றும் ரமேஷ் திலக் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை வியாழக்கிழமை (ஏப். 2) அன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில், நடிகர் தம்பி ராமையா “அமைச்சர் வரதராஜ்” எனும் கதாபாத்திரத்திலும், நடிகர் ரமேஷ் திலக் “டாக்டர் சுப்ரமணி” எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
Summary
New character introduction posters have been released for the film "con City," starring actor Arjun Das.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவனம் ஈர்க்கும் பூ பாடல்!

அர்ஜுன் தாஸின் கான் சிட்டி! புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

மதவாத அரசியல் கேரளத்தில் எடுபடாது: காங்கிரஸ்
29 - மேன்சன் குத்து பாடல் வெளியீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



