கடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

மீண்டும் முக்கோண காதல்... திருமாங்கல்யம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

திருமாங்கல்யம் தொடரின் ஒளிபரப்பு தேதி தொடர்பாக...

News image
திருமாங்கல்யம் தொடர்
Updated On :29 அக்டோபர் 2025, 8:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருமாங்கல்யம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடரில் மேகா சல்மான், பிரித்விராஜ், காயத்ரி ஸ்ரீ ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தத் தொடரில், கதையின் நாயகியை (மேகா), நாயகன் (பிரித்விராஜ்) விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்கிறார். ஆனால், நாயகன் முன்பே காயத்ரி ஸ்ரீ உடன் திருமண நிச்சயதார்தத்தை முடித்திருப்பார்.

இவர்கள் மூவருக்கு இடையிலான முக்கோண காதல் கதையே திருமாங்கல்யம் தொடரின் கதையாகும். நாயகன் முன்பே ஒரு பெண்ணை நிச்சயித்த நிலையில், நாயகி எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

நடிகை மேகா சல்மான் கேரளத்தில் சில தொடர்களில் நடித்து பிரபலமானவர். நடிகர் பிரித்விராஜ் தெலுங்கில் தொடர்களில் நடித்துள்ளார்.

YouTube video thumbnail

மேலும் இந்தத் தொடரில் மது மோகன், சசி லயா, ஆடிட்டர் ஸ்ரீதர், டேவிட் மணோ, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

திருமாங்கல்யம் தொடர் நவ. 3 ஆம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப உறவுகள் மையப்படுத்தி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாரி ஜாதம், கெட்டி கேளம் தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதே பாணியில் திருமாங்கல்யம் தொடரும் எடுக்கப்பட்டுள்ளது.

summary

The broadcast date and time of the Thirumangalyam series have been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.