2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கெட்டி மேளம் தொடரிலிருந்து விலகிய சிபு சூர்யன்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கெட்டி மேளம் தொடரில் இருந்து நடிகர் சிபு சூர்யன் விலகியது குறித்து...

News image
சிபு சூர்யன்- படம் - இன்ஸ்டாகிராம்
Updated On :23 அக்டோபர் 2025, 10:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கெட்டி மேளம் தொடரில் இருந்து நடிகர் சிபு சூர்யன் விலகியுள்ளார்.

இந்தத் தொடரில் சாயா சிங்கிற்கு ஜோடியாக சிபு நடித்து வந்த நிலையில், தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 6.30 மணிக்கு கெட்டி மேளம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

லக்‌ஷ்மி நிவாசா என்ற கன்னட மொழித் தொடரின் மறு உருவாக்கமாக ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில், சாயா சிங், சிபு சூர்யன், விராட், செளந்தர்யா ரெட்டி, பிரவீனா, பொன்வண்ணன் உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர்.

குடும்ப டிராமாவுடன் காதல் காட்சிகள் நிறைந்த இந்தத் தொடரில் சாயா சிங்கிற்கு ஜோடியாக சிபு சூர்யன் நடித்து வந்தார்.

தற்போது இவர், கெட்டி மேளம் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் இவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கெட்டி மேளம் தொடரின் ரசிகர்களிடையேயும் இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

கெட்டி மேளம் தொடரின் நட்சத்திரங்கள்...

கெட்டி மேளம் தொடரின் நட்சத்திரங்கள்...

சமீபத்தில் நடைபெற்ற ஜீ குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் சிபு சூர்யனுக்கு முக்கியத்துவம் அளிக்காததன் காரணமாகவே கெட்டி மேளம் தொடரில் இருந்து விலகியதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது.

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவில் எந்தவொரு பிரிவிலும் சிபு சூர்யன் நாமினேஷன் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Sibbu Suryan quits from Gettimelam serial zee tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.