ஹார்ட் பீட் - 2: ரீனாவுக்கு தெரியவந்த உண்மை... இனி நடக்கப்போவது என்ன?
ஹார்ட் பீட் - 2 இணையத் தொடரில் இனி நடக்கப்போவது என்ன என்பது குறித்து...
ஹார்ட் பீட் - 2 இணையத் தொடரில் இனி நடக்கப்போவது என்ன என்பது குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
C Vinodh
ஹார்ட் பீட் - 2 இணையத் தொடரில் ரீனாவுக்கு தன்னுடைய தந்தை யார் என்பது குறித்த உண்மை தெரியவந்துள்ளது.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடர் ஹார்ட்பீட் - 2. இந்த வெப் தொடரில் நடிகை அனுமோள், தீபா பாலு, பாடினி குமார், யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ஹார்ட் பீட் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரின் கதையின்படி அனுமோளின்(ரதி) மகளான தீபா பாலுவை(ரீனா) குழந்தையாக இருக்கும்போது ரதி காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொள்கிறார்.
இதனிடையே, திடீர் திருப்பமாக ரீனாவின் தந்தை கார்த்திக்(விஜய்) கதைக்குள் வந்தார். இதனால் ரதி மற்றும் விஜய்யின் கடந்த கால வாழ்க்கையின் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று வெளியான எபிசோடில் விஜய்தான் ரீனாவின் தந்தை என ரதி கூறிவிடுகிறார். கடந்த கால வழக்கொன்றில் விஜய்யை, காவல் துறை கைது செய்கிறது. ரீனாவுக்கு திடீர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இப்படியாக இந்த வார எபிசோடுகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகியுள்ளது. ரீனாவும் விஜய்யும் ஒன்றுசேர்வார்களா? விஜய்யிடம் ரீனா உண்மையை கூறுவாரா? என்பது வரும் நாள்களில் தெரியவரும்.
இன்னும் ஒருசில வாரங்களில் இந்த பாகம் நிறைவடையவுள்ள நிலையில், இந்த பாகத்தோடு ஹார்ட் பீட் தொடர் நிறைவுபெறுமா? அல்லது மூன்றாவது பாகம் தொடருமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வசூலித்த அறிமுக இயக்குநர்கள்!
In the web series Heartbeat - 2, Reena discovers the truth about who her father is.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது