தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ள இருவர் குறித்து...

News image
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.
Updated On :16 அக்டோபர் 2025, 1:10 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய்சேதுபதியே, இம்முறையும் தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீடு இம்முறை சூப்பர் டீலக்ஸ் வீடு, பிக் பாஸ் வீடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் வீடு சொகுசு வசதிகளுடனும், பிக் பாஸ் வீடு அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை போட்டியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, யோகா ஆசிரியரான நந்தினி, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பவர்களுடன் சண்டையிட்டு, மனச்சோர்வுடன் காணப்பட்ட நிலையில், பிக் பாஸிடம் தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சியில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறினார்.

வார இறுதி வெளியேற்றத்திற்கான நிகழ்ச்சி நேற்று(அக். 11) நடைபெற்ற நிலையில், மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இந்த வாரம் இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார்.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் இன்று இரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிய வரும். இருவர் வெளியேறியுள்ள நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

summary

Two people have been eliminated from the Bigg Boss show this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.