கைதி - 2 இல்லை! லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் இதுதானாம்!
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்து...
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Sivashankar
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் அடுத்த படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார்.
கூலி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் டிசி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நடிகர் கார்த்தியை வைத்து கைதி - 2 திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால், நடிகர் கார்த்தி இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் படத்தில் நடிக்கச் சென்றார். இதனால், இப்படம் கைவிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் துணை இயக்குநர் ஒருவர் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “எல்கே 7 அணி” எனக் குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை, இது கைதி - 2 ஆக இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
ஆனால், கைதி - 2 இல்லையாம். நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து லோகேஷ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். அதற்கான பணிகளே இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் லோகேஷுடன் இணைவார் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: ஓ, காதலே..! தனுஷின் தேரே இஷ்க் மே - திரை விமர்சனம்
lokesh kanagaraj directional movie with allu arjun
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது