நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரையரங்குகளில் நாளை வெளியாகும் 10 தமிழ் படங்கள்!

திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

News image
Updated On :13 மார்ச் 2025, 1:52 pm

DIN

திரையரங்குகளில் இந்த வாரம் 10 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. எந்தெந்த திரைப்படங்கள் நாளை(மார்ச் 14) வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து இருக்கும் திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். இப்படத்தை நடிகர் ரியோ ராஜ் நடிக்க அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ளார். இப்படம் நாளை(மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிகர் வைபவ் நடித்துள்ள பெருசு திரைப்படம் நாளை வெளியாகிறது.

இயக்குநர் கே. ரங்கராஜ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். பிரதான பாத்திரங்களில் ஸ்ரீகாந்த், பூஜிதா ஆகியோர் நடித்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது.

மேலும் டெக்ஸ்டர், குற்றம் குறை, மாடன் கொடை விழா, வருணன், ராபர் உள்ளிட்ட திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் மற்றும் ரவி மோகனின் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஆகிய படங்கள் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.