/

நடிகர் கிருஷ்ணாவிடம் விடியவிடிய விசாரணை! வீட்டில் சோதனை!

நடிகர் கிருஷ்ணாவிடம் விடியவிடிய விசாரணை நடத்தியது பற்றி...

News image

நடிகா் கிருஷ்ணா - கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2025, 3:16 am

போதைப் பொருள் வழக்கில் நடிகா் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸாா் 16 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினா்.

கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகா் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த பிரதீப்குமாா் ஆகியோா் மூலமாக கொகைன் போதைப் பொருள் வாங்கியிருப்பது தெரியவந்தது.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீஸாா் முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீஸாா் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினா்.

இதில், தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது, தான் ஏற்கெனவே இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரசாத்துக்கும் தனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது என்றும் கூறியுள்ளாா்.

மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடனான கிருஷ்ணாவின் உரையாடல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை பெசண்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவில் வீட்டில் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.