தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினி! ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது?

இயக்குநர் நெல்சன் பிறந்தநாளில் ஜெயிலர் 2 படக்குழு பகிர்ந்த புகைப்படங்கள்...

News image

இயக்குநர் நெல்சனுக்கு கேக் ஊட்டிய நடிகர் ரஜினி. - படம்: எக்ஸ் / சன் பிக்சர்ஸ்

Updated On :21 ஜூன் 2025, 10:27 am

இயக்குநர் நெல்சன் பிறந்தநாளில் ஜெயிலர் 2 படக்குழு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். கூலி திரப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

ஜெயிலர் -2 அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நெல்சன் பிறந்தநாளில் ரஜினி கேக் ஊட்டிய புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

அந்தப் புகைப்படத்தில் ரஜினி, நெல்சன் உடன் நடிகர் யோகி பாபுவும் இருக்கிறார்.

முதல் பாகத்தில் ரஜினி - யோகி பாபு கூட்டணி நகைச்சுவை காட்சிகள் நன்றாக இருந்தன.

முதல் பாகத்தில் நடிகை தமன்னா ஆடிய பாடலும் மிகவும் வைரலானது. அனிருத் இசையில் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

தற்போது, ஜெயிலர் - 2 படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.